திங்கள், 19 டிசம்பர், 2011

தாளாளருக்குப்பாராட்டுக்
கவிதை



தாயாகப் போகும்
தனதன்பு மகளுக்குப்
பேறுகால வலி
வரும் முன்பே
நகரில் சிறந்ததொரு
மருத்துவ மனையில்
சேர்த்துவிட்டு தாளாளர்
வெளியூர் சென்றதை
நான் அறிவேன்.

வீட்டிலேயே மருத்துவர்
யாரும் இன்றி குழந்தையைப்
பெற்றுஎடுக்கலாம்.
தாய் சேய் நலங்கருதி
நல்ல மருத்துவ மனையில்
சேர்த்து சிறந்த மருத்துவர்
வைத்தும் குழந்தையைப்
பெறலாம்.

மற்ற கல்வியியல்
கல்லூரிகள் போல்
Ph.D.-முதல்வர் இன்றியும்
கல்லூரி நடத்தலாம்.
திறமையான Ph.D.-முதல்வரை
நியமித்தும் நடத்தலாம்.
அனைத்தும் தெரிந்த
அறிவுசான்ற தாளாளர்
தேர்ந்தெடுத்த வழி
இரண்டாவதாகச்
சொன்னதாகும்.
கூடுதல் செலவினைச்
சிந்தையில் கொள்ளாமல்
சீரிய தரமான கல்வி
தருவதைக் கருத்திலிருத்தி
வானளாவும் புகழ் கொண்டு
பீடு நடை போடுதற்கு
முனைவர் பட்டம் பெற்றவரை
முதல்வராக நியமனம்
செய்த தாளாளருக்கு -
தாராளமனச் செம்மலுக்கு
இதயம் கனிந்த
பாராட்டுகள் உரித்தாகுக.

இவண்
D.J.மங்களராஜ்
இயக்குநர்
19-12-2011