திங்கள், 20 பிப்ரவரி, 2017

இரங்கல் கவிதை

இப்புவி எனும் பூஞ்சோலையில் 
மலர்ந்து மணம் பரப்பி நின்ற 
ஒரு மலர் உதிர்ந்து விட்டது. 
அதன் மணம் மறைந்து விட்டது.
ஒரு தென்றல் நின்று விட்டது. 
ஒரு வசந்தம் முடிந்து விட்டது.
ஒரு தீபம் அணைந்து விட்டது.
ஒரு பாடும் பறவை பறந்து விட்டது. 
அதன் இனிய பாடல்  நின்று விட்டது.
ஒரு இன்னிசை கீதம் தொடர 0
முடியாமல் முடிவுக்கு வந்து விட்டது. 

(  கும்பகோணம் வீட்டு  உரிமையாளரின் 
  மனைவி புற்று நோயால் இளம் வயதில் 
மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)