வியாழன், 31 மார்ச், 2011

CHANGE (Quotes ) (31-3-2011)


காலம் மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டிருக்கும்.
மாற்றம் தவிர்க்க முடியாதது ஒன்று.

மாறுவதற்கு நமக்குள்ள திறனே
நமக்குரிய ஒரே பாதுகாப்பு ஆகும்.

எல்லாம் மாறிவிடும் என்ற உண்மையை
ஏற்கவில்லை என்றால்
பூரண அமைதியைப் பெறமுடியாது.

சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டிருக்கின்ற
இவ்வுலகில் மாற்றிக்கொள்ள முடியாத 
நோக்கமோ, கருத்தோ முட்டாள்தனமானது ஆகும்.

ஒரு சூழ்நிலையை நம்மால் மாற்ற இயலவில்லை எனில்
நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நிலையான மகிழ்ச்சி மற்றும் அறிவு உடையவர்கள் 
அடிக்கடி மாறுபவர்கள் ஆவர்.

ஒன்றைப் பிடிக்கவில்லை எனில் அதை மாற்று..
அதை  மாற்ற முடியவில்லை  எனில், அதைப்பற்றி
எண்ணுகின்ற முறையை மாற்றிக்கொள்.

நிலையற்ற வாழ்வில் நாம் எதை நம்புவது ?
மகிழ்ச்சி, உயர்வு மற்றும் பெருமை யாவும்
நிலையற்றவை ஆகும்.







சனி, 26 மார்ச், 2011

Hidden Beauty



மேகம் மறைத்துநிற்கும்
மலைமுகடு அழகா?


மேகம் மறைக்காத 
மலைமுகடு அழகா?

மறைத்து வைப்பதில்தான்
கவர்ச்சி கூடுகிறது.

மறைக்கபடுவதில்தான்
ஆவல் தூண்டப்படுகிறது.



வியாழன், 24 மார்ச், 2011

Dogmas

எந்த ஒரு மதத்தை எடுத்து ஆழ்ந்து பார்த்தாலும்
அந்த மதத்தின் கோட்பாடுகளாக, விதிகளாக,
கட்டளைகளாக கூறப்படுபவை எல்லாம் அந்த 
மதத்தைப் பின்பற்றும் தனி மனிதனின் மூலமாகவே
உண்டாகின்றன.
சிறு கிராமத்தில் வழிபடும் இடமானாலும், புண்ணிய ஸ்தலமாகக் 
கருதப்படும் பெரிய வழிபாட்டிடம் என்றாலும் பக்தர்கள் 
கடைபிடிக்க வேண்டியவற்றை, அவ்விடங்களில் உள்ள 
தனி மனிதர்களே தீர்மானிக்கின்றனர்.தெரிந்தோ தெரியாமலோ
மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர்..கடவுளுக்கே இல்லாத
அக்கறை அவர்களால் காட்டபடுகிறது.