சனி, 28 மே, 2011

Vidai pera villai

அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே !

உருவகப் படுத்திக் கூறும்போது  
கல்வியியல் கல்லூரி குழந்தை எனவும்
நான் செவிலித்தாய் எனவும் ஆகும்...
கல்லூரி உதயம் ஆகும் முன்பே
 11-8-2006 அன்றே பணியில் 
 நான் சேர்ந்துவிட்டேன்.
இரு வாரங்கள் கழித்து
 தாளாளர் அவர்களுடன்
நானும் மற்றும் மூவரும் 
NCTE ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க
பெங்களூரூ  சென்றோம்.
கல்லூரி எனும் குழந்தை
பிறந்த கதையில் இன்னும்
எத்தனையோ மறக்க முடியாத
தொடர் சம்பவங்கள் உண்டு.
NCTE  குழுவினரின் வருகை,
அழகப்பா பல்கலைக் கழக
 இணைவு பெற விண்ணப்பம்
அதற்கான குழுவினர் வருகை
தாளாளரின் செல்ல மகள் 
திருமணத்துக்கு மறுநாள்
 B.Ed. வகுப்பு துவக்கம்,
காலம் தாழ்ந்து பெறப்பட்ட
இணைவு ஆணை
என நிகழ்வுகளின்
பட்டியல் நீண்டு செல்லும்.

பிறந்த குழந்தைக்குப் பாலூட்டி
சீராட்டி தாலாட்டி வளர்த்திட்ட
செவிலித்தாய் போல்
கல்லூரியின் வளர்ச்சியை
கண்ணுற்று களித்தேன்.
குழந்தை தத்தி தத்தி
நடை பயில அதன் கரம்
பிடித்து வழி நடத்திய
வளர்ப்புத்தாய் போன்று
கல்லூரியை வழிநடத்தினேன்.
இன்று குழந்தை பிடிக்காமல்
தானே நடக்கும் நிலைக்கு
வளர்ந்துவிட்டது.
சீராட்டிப் பாராட்டி
வளர்த்த தாய்
இன்று ஐந்து வயதை
எட்டிப் பிடித்த சேயை
விட்டுப் பிரிந்து போக
மனமின்றி தவிக்கிறாள்.
திரைப் படப் பாடல் ஒன்று
நெஞ்சினிலே தொடர்ந்து
ஒலித்துக்கொண்டிருக்கிறது

கலை மகள் கைப்பொருளே
உன்னைக் கவனிக்க ஆளில்லையே
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரலில்லையே

நான் யார் உனை மீட்ட? - வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு
நிலை இல்லாமல் தவிக்கிறேன்

கல்லூரி பதிவேட்டில் இன்று
இயக்குனர் மற்றும் முதல்வர்
பெயர்கள் இல்லை.
ஏன் இது நடந்தது
எனத் தெரியவில்லை.
அதனால் தான்
நான் யார் உ னை மீட்ட? - வரும் 
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
எனும் பாடல் வரிகள்
நெஞ்சில் இடைவிடாமல் 
ஒலித்த வண்ணம் உள்ளன.
நான் விடை பெறவில்லை.
மீண்டும் வருவேன்
காலம் கனியும் வரை
காத்திருப்பேன்


















புதன், 25 மே, 2011

Oh! my dear daughter

என் அன்பு மகளே !
நீ எப்போது மாறினாய்?
இரண்டு விஷயத்தில்
நீ மாறிவிட்டாய்!
ஒன்று மதநம்பிக்கை பற்றியது
மற்றது வாழ்க்கை முறை பற்றியது.
நீ வளர்க்கப்பட்ட விதம்
தாமரை இலைத் தண்ணீர் போல்
மதத்துடன் ஒட்டாமல்  விலகி நின்று
வாழ்ந்திட வழி வகுப்பதாகும்.
அது போன்றே
நீ வளர்க்கப்பட்ட விதம்
பகட்டையும் படாடோபத்தையும்
விரும்பாம்மல் எளிமையாய்
வாழ்வதற்கு வழி செய்வதாகும்.
சொகுசும் வசதியும்
பெற்ற சுகமான வாழ்வு
வாழ்ந்திடுதல் ஏற்கத்தக்கது
ஒளி அறியா இருட்டில் வாழும்
பார்வையற்றவர்களை
படிப்பதற்கு வகுப்பெடுத்து
வழி நடத்தும்
தியாகத்தைப் புரியும் உனக்கு
எளிமையை விரும்பும் மனம்
இயல்பாகவே இருக்கும்.
ஆடம்பரமும் அகந்தையும்
உனக்கு உடன்பாடானவையாக
.இருக்க முடியாது.
இப்போது நீ எளிமையை
விரும்புகிறாயா?
பகட்டையும் படாடோபத்தையும்
வெறுக்கிறாயா ?
தற்பரிசோதனை செய்து பார் 
முன்பு போல் மாறுவாயா?
இவ்வுலகத்தின் பெருமையையும் 
வீண் ஆடம்பரத்தையும்
வெறுத்துவிடுவாயா?



 

 
 




























திங்கள், 16 மே, 2011

cinema lyrics humming in the ears

             (1)

பூவாகிக் காயாகிக் 
கனிந்தமரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் 
கிடந்தமரம் ஒன்று

                 (2)
                
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளம் இல்லை மகளே

                            (3)

கலைமகள் கைப்பொருளே - உன்னைக்
கவனிக்க ஆள் இல்லையே
விலையில்லா மாளிகையில்- உன்னை
மீட்டவும் விரல் இல்லையே
நான் யார் உன்னை மீட்ட -வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு 
நிலையில்லாமல் தவிக்கிறேன்