அமெரிக்காவில் சில மாநிலங்களில் குளிர்காலம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் இங்கு வாழ்க்கை மிகவும் சங்கடமாகிவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.வீட்டைவிட்டு வெளியே செல்லும் விருப்பம் இல்லாமற்செய்யும் நடுங்கவைக்கும் பயங்கர குளிர் ஒரு காரணம் ஆகும். மனம் தளர்ந்திடலுக்கு மற்றொரு காரணம் வெளியில் உள்ள பனிப்பொழிவும் பார்க்கும் இடமெல்லாம் தரையில் கிடக்கும் உறைபனியும் தான். இது வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்து விளைவிக்கும் காரணி ஆகும். சாலையில் உறைபனி காரணமாக
காரின் பிரேக்குகள் செயல்படுவதில்லை.எனவே முன் செல்லும் அல்லது பின்னால் வரும் வாகனங்களுடன் மோதும் ஆபத்து உருவாகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்திச் செல்ல வேண்டிவரும் சாலச் சந்திப்புகளில் இது மிகவும் கடுமையான பிரச்சினையாகிவிடுகிறது. பனிவிழும்போது எதிரே உள்ளது எதுவுமே தெளிவாகத் தெரியாதபடி போய்விடுகிறது.
அமெரிக்காவின் வடபாகத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் குளிராக இருக்கும். பொதுவாக அமெரிக்கா முழுவதுமே டிசெம்பர் , ஜனவரி, பிப்ரவரி மூன்று மாதங்கள் கடுங்குளிர் இருக்கும்.
குழாய் நீரில் கைவைக்க முடியாது. தண்ணீர் குடிக்க முடியாதபடி குளிராக இருக்கும். குளிர் நீரில் குளிக்க முடியாது.ஆகவே இங்கு தனியான சொந்த வீடானாலும், வாடகை வீடானாலும், தொகுப்பு வீடானாலும் கண்டிப்பாக சூடுநீர் வசதி இருபத்து நான்கு மணிநேரமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெந்நீருக்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் மின்சார உலை நிறுவி, சமையல் அறை, குளியல் அறை, வாஷ் பேசின் என நீர் பயன்படும் எல்லா இடங்களுக்கும் குழாய் மூலம் இணைப்பு ஏற்படுத்தி விநியோகம் பண்ணுகிறார்கள். வெந்நீர் , தண்ணீர் இரண்டுக்கும் தனிதனி
குழாய்கள் இல்லாமல், இரண்டுக்கும் ஒரே திருக்கு (knob) மூலம் குறிப்பிட்ட அளவு திருக்கி, தேவை
யான சூட்டில் நீர் வரச் செய்கிறார்கள். தேவையான நேரம் மட்டும் உலையில் வெந்நீர் சூடுபடுத்திக்
கொள்ளாமல், நாள் முழுவதும் உலையில் வெந்நீர் இருக்கும்படி உலை இயக்கப்படுகிறது
ஆகாயத்தில்விமானத்தின் பாதை
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் போஇங் 777 விமானகளைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் பார்த்தறியும்டி
மானிட்டரில் விமானம் பறத்தல் குறித்த விவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. விமானம் பறக்கும்
உயரம், விமானத்தின் தரை வேகம், விமானத்தின் வெளியே வெப்பத்தின் அளவு,புறப்பட்ட இடத்தில் உள்ளூர் நேரம்,சேருமிடத்தில் தற்போதைய நேரம், இன்னும் செல்லவுள்ள தூரம், அதற்காகும்
நேரம்,சேருமிடமடையும் நேரம்,காற்றின் வேகம் ஆகிய குறிப்புகள் தரப்படுகின்றன. விமானம் பறக்கும்
மிகுந்தஉயரம் 39000 அடி ஆகும். உயரம் கூடும்போது வெளிவெப்பநிலை குறைகிறது. மிக உயரத்தில் (39000 அடி) பறக்கும்போது வெப்பநிலை மிகவும் குறைந்து 59சென்டிகிரேட் என்றாகிறது. விமானத்தின்
வேகம் அவ்வப்போது மாறுகிறது. அதற்கேற்றவாறு சென்றடையும் நேரம் வேறுபடுகிறது. விமானம்
தரை இறங்க இருபது நிமிடங்கள் இருக்கும்போது எல்லா விளக்குகளும் போடப்படுகின்றன. மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியும்படியும், இருக்கையை செங்குத்து நிலைக்குக் கொண்டுவரும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர். விமானம் தரையைத் தொட்டபின் டெர்மினல் Gate -ஐ அடைய சிறிது நேரமாகிறது. அதுவரை யாவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
லங்காஸ்டர் கிராம மாதிரி
பால்டிமொரிலிருந்து நியூ ஜெர்சி செல்லும் சாலையில் சில மைல் தூரம்
விலகிப்போனால் லங்காஸ்டர் என்ற ஊர் வருகிறது.அங்கு ஆமிஷ் கிராமம் என்று ஒரு
மாதிரி கிராமத்தை உருவாக்கி உள்ளனர். ஆமிஷ் மக்கள் என்று அழைக்கப்படும் ஒரு
குழுவினர் ஸ்விட்சர்லாந்து, அல்சேஷ் (தற்போது பிரான்சில் உள்ளது) மற்றும் ஜெர்மனில்
உள்ள பாலடிநெட் ஆகிய பகுதிகளில் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அமெரிக்காவில்
குடியேறியவர்கள் ஆவர்.
அமெரிக்காவில்
,
,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக