நாங்கள் Nauvoo பார்வையாளர் மையத்தில் திறந்த வெளியரங்கில் நடந்த,ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம். 'மிசிசிப்பியில் சூரியன் மறைதல்' என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய குழுபாடல்களும், நடனங்களும்இன்னிசையும் மனத்தைக் கவர்ந்தன.நிகழ்ச்சியின் இடையே இருவர் அமெரிக்க நாட்டு கொடிகளைப் பிடித்தவாறு முன்செல்ல, நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் அணிவகுத்து வருகின்றனர்.பின்புஅமெரிக்க தேசியகீதம் பாடப்பட்ட து.பார்வையாளர் அனைவரும் எழுந்து, தங்கள் வலது கையை நெஞ்சின்மீது வைத்து நின்றனர்.பாடல் முடிவு பெற்றதுமArmy, Navy, Air force,
Marines,Coast Guards ஆகிய நாட்டின் பாதுகாப்பில் இணைந்து பணிபுரிவோரைப் போற்றி பாடகள் தனித்தனியாகப் பாடப்பட்டன. அப்போதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அமெரிக்க மக்களின் நாட்டுபற்றை இது படம்
பிடித்துக் காட்டுவதாக இருந்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக