வெள்ளி, 8 ஏப்ரல், 2011

CONTENTMENT

உயர உயர போய்க்கொண்டே இருக்க முடியாது.
எட்டப்பட்ட உயரம் போதும் என்று எண்ணி 
மன நிறைவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உடலுக்கும் மனத்துக்கும் அதுதான் நல்லது.

புதன், 6 ஏப்ரல், 2011

Sever Attachment

பந்தத்தை அறுத்து எறி

வாழ்க்கையில் எந்த பந்தமும் வளர்க்காமல்
இருப்பதுதான் நிம்மதி பெறுவதற்கு வழியாகும்.
மனத்தில் எந்தவொன்றையும் குறித்து
பரிவுக்கு இடம் அளிக்கக்கூடாது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Felicitation Poem

வாழ்த்து கவிதை

புத்தாண்டு மலர்ந்த
மறு நாளாம் இன்று
புரட்சித் தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனங்கள் 
மூன்றில் ஒன்றான
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
ஐந்தாம் ஆண்டு விழா.

தாளாளரின் சிந்தையிலே உதித்த
முதல் குழந்தையின் வாழ்வில்
இனிதான திருநாள் இது.
பொன்னாளாம் இந்நாளைச்
சீரும் சிறப்புமாகக் கொண்டாடத்
திட்டம் தீட்டியபோது
ஒப்பாரும் மிக்காரும் இல்லா 
ஒருவரைச் சிறப்புப் பேச்சாளராக
அழைக்கும்  எண்ணம் 
தாளாளர் மனத்தில் எழுந்தது.

அனைவரையும்
நகைச்சுவை மழையில்
நனையவைக்கும்
தித்திக்கும் கரும்பனைய பேச்சாளர்
நெல்லைக் கண்ணன்
தாளாளர் நினைவில் வந்தார்.
நேர்மிகு நெல்லைக் கண்ணன்
சங்கத்தமிழ் குறுந்தொகைபேச்சாளரோ
தங்கத்தமிழ் பெருந்தொகை பேச்சாளரோ
யாராயினும் அவரை அழைக்கத்
தாளாளர் நல்ல முடிவெடுத்தார்.

நேரம் போவதே தெரியாமல்
மணிக்கணக்கில் தனது
தேமதுரப் பேச்சால் கூட்டத்தினரை
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க
நம்மிடையே வந்துள்ளார்
நண்பர் நெல்லைக் கண்ணன் .

நானும் நெல்லையைச் சேர்ந்தவன்தான்
என்பதில் பெருமை மிகக் கொள்கிறேன்.

என் உடல் நலம் கருதி
உடலாலும் மனத்தாலும்
பணியிடத்தைத் தவிர்க்கும்
நிலை எழுந்துள்ளது.
எனவே நேரில் வந்து
கலந்துகொள்ள
இயலாமல் தவிக்கிறேன்.

விழா சீரோடும் சிறப்போடும்
நடைபெற மனதார வாழ்த்துகிறேன்

இவண்
இயககுநர்
____________________________________________
என் உடலளவில் இல்லத்தில் இருக்கிறேன்
என் உள்ளமோ விழா அரங்கில் உள்ளது.
உடல் நலக்  குறைவிலிருந்து மீண்டு வருவேன்.
விரைவில் மீண்டும் வருவேன்.

Decision (1-4-2011)

எந்த செய்தியையும்  தெரிந்துகொள்ளும் விருப்பம் இல்லை.
டிவி பார்க்கவோ நியூஸ் பேப்பர் படிக்கவோ ஆர்வம் இல்லை.
வருகின்ற செய்திகள் மனத்திற்கு ஊக்கம் அழிப்பதாகத்
தெரியவில்லை. வீணாக ஏன் செய்திகளைத் தெரிந்து கொண்டு 
பின் வருந்த வேண்டும் என்று எண்ணி டிவி மற்றும் நியூஸ் பேப்பர்
பக்கமே போவதில்லை. 

Lessons

நேரில் கண்டவை கற்றுத்தந்த பாடங்கள்

இன்று காலையில் தென்னை ஈர்க்குமார் கட்டினைத் தலையிலும்
தேங்காய் நிறைத்த பையினை க் கையிலும் தூக்கிக்கொண்டு 
விற்பதற்கு முதியவர் ஒருவர் வீதியில் போய்க்கொண்டிருந்தார்.
ஆதரவற்ற நிலையில் உழைத்துப் பிழைப்பதைக் காணமுடிந்தது.
பணம் இல்லை என்று நாமெல்லாம் நினைக்கக்கூடாது என்பதை
இக்காட்சி எனக்கு உணர்த்தியது.
இது போன்ற எண்ணற்ற காட்சிகளைத் தினமும் பார்க்கிறேன்.
பொருளாதார நிலை குறித்து திருப்தி உடையவராக நாம்
இருக்க வேண்டும் என்பதையே இக்காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்திய  நாடு ஏழைகள் நிறைந்த நாடு. வறுமையில் வாடும் மக்களை 
எங்கு நோக்கினும் காணலாம். 
பராசக்தி திரைப்படத்தில் 
 "வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா
அதற்கு அழிவே இல்லையா?" என்ற பாடல் வரிகள் வரும்.
ஆம் . ஒருநாளும் விடிவே கிடையாது என்று கூறும்படிதான்
நிலைமை இருக்கிறது.