வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Felicitation Poem

வாழ்த்து கவிதை

புத்தாண்டு மலர்ந்த
மறு நாளாம் இன்று
புரட்சித் தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனங்கள் 
மூன்றில் ஒன்றான
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
ஐந்தாம் ஆண்டு விழா.

தாளாளரின் சிந்தையிலே உதித்த
முதல் குழந்தையின் வாழ்வில்
இனிதான திருநாள் இது.
பொன்னாளாம் இந்நாளைச்
சீரும் சிறப்புமாகக் கொண்டாடத்
திட்டம் தீட்டியபோது
ஒப்பாரும் மிக்காரும் இல்லா 
ஒருவரைச் சிறப்புப் பேச்சாளராக
அழைக்கும்  எண்ணம் 
தாளாளர் மனத்தில் எழுந்தது.

அனைவரையும்
நகைச்சுவை மழையில்
நனையவைக்கும்
தித்திக்கும் கரும்பனைய பேச்சாளர்
நெல்லைக் கண்ணன்
தாளாளர் நினைவில் வந்தார்.
நேர்மிகு நெல்லைக் கண்ணன்
சங்கத்தமிழ் குறுந்தொகைபேச்சாளரோ
தங்கத்தமிழ் பெருந்தொகை பேச்சாளரோ
யாராயினும் அவரை அழைக்கத்
தாளாளர் நல்ல முடிவெடுத்தார்.

நேரம் போவதே தெரியாமல்
மணிக்கணக்கில் தனது
தேமதுரப் பேச்சால் கூட்டத்தினரை
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க
நம்மிடையே வந்துள்ளார்
நண்பர் நெல்லைக் கண்ணன் .

நானும் நெல்லையைச் சேர்ந்தவன்தான்
என்பதில் பெருமை மிகக் கொள்கிறேன்.

என் உடல் நலம் கருதி
உடலாலும் மனத்தாலும்
பணியிடத்தைத் தவிர்க்கும்
நிலை எழுந்துள்ளது.
எனவே நேரில் வந்து
கலந்துகொள்ள
இயலாமல் தவிக்கிறேன்.

விழா சீரோடும் சிறப்போடும்
நடைபெற மனதார வாழ்த்துகிறேன்

இவண்
இயககுநர்
____________________________________________
என் உடலளவில் இல்லத்தில் இருக்கிறேன்
என் உள்ளமோ விழா அரங்கில் உள்ளது.
உடல் நலக்  குறைவிலிருந்து மீண்டு வருவேன்.
விரைவில் மீண்டும் வருவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக