விமான நிலையத்தில் wheel chair வசதி
ஏர்வேய்ஸ் விமானங்கள் வந்து செல்வதால் அவை வந்திறங்கும்,மற்றும் புறப்பட்டுச்செல்லும் Gate எது என்பது ஒரு மணி நேரம் முன்னதாகத்தான் அறிவிக்கப்படுகிறது..சிக்காகோ செல்ல வேண்டிய விமானம் புறப்படும் Gate எது என்ற அறிவிப்பு வரும் வரை நாங்கள் வந்து இறங்கிய டெர்மினலில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம்.அறிவிப்புவந்ததும் குறிப்பிட்ட Gate ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.நான் ஏற்கனவே நீண்ட தூரம் டெர்மினல் முழுதும் நடந்துசுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்தேன். எனவே மீண்டும்நடக்கத் தயக்கமாக இருந்தது. ஆனால் நடக்கத்துவங்கியவுடன் wheel chair ஐத் தள்ளிக்கொண்டு வந்தவரிடம் wheel chair பற்றிவிசாரித்தேன். அவர் இநதிய வம்சத்தவர் என்பதால் என்னைஅதில் கொண்டுபோக இசைந்தார்.அவர் விரைவாக என்னை lift ல்
அழைத்துச் சென்று transition train மூலம் சிக்காகோ செல்லும்விமானத்துக்கான Gate -ல் உள்ளே முதல் ஆளாக ஏறுவதற்குiவழி செய்தார். அவர் செய்தஉதவியால் மிக விரைவாக சிரமம் ஏதுமில்லாமல் விமானத்தில் எங்கள் இருக்கைகளில் சென்று மகிழ்ச்சியுடன் அமர்ந்தோம். wheel chair வசதி வேண்டுவோர் விமான
டிக்கெட் வாங்கும்போதே கேட்டுவிட வேண்டுமாம்.
அமெரிக்காவில் இம்முறை கண்ட புதுமைகள்
வீட்டில் குழாய்த்தண்ணீர் வேண்டிய சூட்டில் பெறுவதற்கு இரண்டு (knobs) திருக்குகள் முன்பு உண்டு. இப்போது ஒரே ஒரு (knob ) திருக்கு மட்டுமே உள்ளது. அதை இடதுபுறம்சுற்றினால் வெந்நீரும் வலது புறம் சுற்றினால் குளிர்ந்த
நீரும் வருகிறது வேண்டிய சூட்டில் சுற்றி நிறுத்திவிட்டால் குறிப்பிட்ட வெப்பத்தில் தண்ணீர் வருகிறது.
என் மகன் வீட்டில் சமையலுக்கு எரிவாயு அடுப்பு முன்பு பயன் படுத்தப்பட்டது. இப்போது மின்சார அடுப்பு (Electric stove ) பயன்படுத்தப்படுகிறது.. அனுகூலம்
யாதெனில் மிகவும் அதிகமான வெப்பம் கிடைக்கிறது.ஆனால் உடனடியாக
சூடாகாமல் சிறிது நேரம் ஆகிறது. மேலும் அனைவரது வீட்டிலும் மைக்ரோவேவ் அடுப்பும் உள்ளது..
அனுபவங்கள் வாயிலாகக் கற்றல்:
நேரடியான அனுபவங்கள் மூலம் எளிதாகக் கற்க முடியும் என்பது ஒரு கல்வியியல் உண்மை ஆகும். பூமி உருண்டையில் பூமத்திய ரேகையை

ஒட்டிய இடங்களில் பகல் மற்றும் இரவு சமமாக இருக்கும். ஆனால் தூரம் செல்ல செல்ல சூரியன் மறையும் நேரம் பிந்துகிறது. இதை நாங்கள் தங்கிய
இடத்தில் காண முடிந்தது. இங்கு இரவு ஒன்பது வரை கூட வெளிச்சமாக உள்ளது. அதுபோல் காலையிலும் சீக்கிரமாக விடிந்து விடுகிறது
.
பூகோளைப்பாடத்தில் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளூர் நேரம் மாறுபடும்
பூகோளைப்பாடத்தில் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளூர் நேரம் மாறுபடும்
என்று படிப்போம்.பூமி ஒரு முறை சுற்ற ,அதாவது 360 டிகிரி சுற்ற 24 மணிநேரம்
எடுக்கிறது. ஆகவே ஒவ்வொரு15 டிகிரிக்கும் 1 மணி நேர வேறுபாடு இருக்கும்.
அமெரிக்கா விரிந்து பரந்த நாடு. மேற்கு ஓரத்தில் உள்ள சான்ப்ரான்சிஸ்கோவில்
இருந்து கிழக்கு ஓரத்திலுள்ள நியூயார்க் வரை 3 மணி நேர வேறுபாடுஉள்ளது.
எனவே சான்ப்ரான்சிஸ்கோவில் காலை 8 மணி எனில், நியூயார்க்கில் காலை 11
இருந்து கிழக்கு ஓரத்திலுள்ள நியூயார்க் வரை 3 மணி நேர வேறுபாடுஉள்ளது.
எனவே சான்ப்ரான்சிஸ்கோவில் காலை 8 மணி எனில், நியூயார்க்கில் காலை 11
மணி ஆகும். இந்தியாவில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் என்று நாடு முழுவதற்கும் ஒரே நேரம்தான் உள்ளது.ஆனால் அமெரிக்காவில் நான்கு நேர மண்டலங்கள் (Time Zones ) இருக்கின்றன.
Daylight Saving Time (DST) என்ற கருத்தும் அமெரிககா சென்றபோது நேரடி அனுபவமாக அறிய முடிந்தது.நீண்ட நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் கோடைக்காலத்தில்அதனைப் பயன்படுத்தும் நோக்கத்தில் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு துவங்கி நவம்பர் மாதம் முதல் ஞாயிறு முடிய ஏறக்குறைய எட்டுமாதங்களுக்கு நேரமானது ஒரு மணி நேரம் முன்னுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று நவம்பர் மாதம் முதல் ஞாயிறு துவங்கி மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு முடிய நேரமானது பழையபடி ஒரு மணி நேரம் பின்னுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் செய்யப்படும் இரண்டு நாட்களிலும் யாவரும் கடிகாரத்தில் நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.
IMAX தியேட்டரில் திரைப்படம் பார்த்த அனுபவம்
ஐயோவா மாநிலத்தில் உள்ள டாவன்போர்ட்டில் உள்ள IMAX தியேட்டரில் 3D திரைப்படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. முதல் முறையாக முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது பரவசமூட்டுவதாக இருந்தது. படம் துவங்கியதும். பிரமாண்டமான திரையில் காட்சிகள் முப்பரிமாணத்தில்
தோன்றி மனத்தைக் கவர்ந்தன. எடுத்துக்காட்டாக, Sharks என்ற 3D படத்தில்
சுறா மீன் நம்மை நோக்கிப் பாய்ந்து வருவதுபோல் தோன்றி அதிர்ச்சியைத்
தந்தது, டெக்சாஸ் மாநிலத்தில் போர்ட்வொர்த் நகரில் உள்ள IMAX தியேட்டரில்
திரைப்படம் பார்த்த அனுபவம் வேறுபட்டதாகும்.அங்கு IMAX தியேட்டரின்
அமைப்பும் , படம் திரையிடப்பட்டவிதமும் வேறுபட்டிருந்தது.அங்கு படம் விழும்
திரையானது அரைக் கோளவடிவத்தில் இருந்தது. மேலும் ஒலிபெருக்கிகள்
திரையரங்கின் முன்னும் , நமக்குப் பின்னும் , நமக்கு வலது, இடது புறங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளன. எனவே படம் ஓடும்போது காட்சிகள் நம் அருகே நிகழ்வது
போன்று தெரிகிறது.உதாரணமாக, குதிரைகள் ஓடும்போது நம் தலைக்கு மேல்
பாய்வதுபோல் உள்ளது.மேலும் ஒலி ஸ்டீரியோ முறையில் பல திசைகளிலும்
எழுந்து நம்மைப் பிரமிப்படைகின்றன .IMAX
தியேட்டரில் திரையிடப்படுவதற்கேன்றே படங்கள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக