திங்கள், 20 ஜூன், 2011

Mississippi River


மிசிசிப்பி ஆறு

Illinois மாநிலத்திலுள்ள Moline நகரத்திலிருந்து  Iowa  மாநிலத்திலுள்ள Davenport
நகரத்திற்குச் செல்ல மிசிசிப்பி ஆற்றினைக் கடக்க வேண்டும். ஆற்றின் மீது 
இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று டாவன்போர்ட்  போவதற்கும் , மற்றபாலம் 
Moline  வருவதற்கும் ஒருவழிப் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது.மிசிசிப்பி 
ஆறு (நைல் நதி போல்) வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது.2500 மைல்
நீளம் உடையது. அது 10 மாநிலங்களைத் தொட்டுச்செல்கிறது.5 மாநிலங்கள் 
அதன் மேற்குக் கரையிலும் 5 மாநிலங்கள் அதன் கிழக்குக்கரையிலும் உள்ளன.
இந்த 10 மாநிலங்களுக்கும் மிசிசிப்பி ஆறு இயற்கையான ஒரு எல்லையாக 
அமைந்துள்ளது. ஆகவே நதிநீர்ப் பிரச்சினை எழாது. ஆற்றினை வைத்து எல்லை
வரையறுக்கப்பட்டுள்ளது மனத்தைக் கவர்ந்தது.

விமானத்தில் பார்த்த பயணிகள்
 
 சென்னையில் லண்டன் செல்லும் பயணிகளில் பல தமிழ் நாட்டவர் இருந்தனர்.
 சிலர் அமெரிக்காவுக்கு IT  சார்ந்த பணிகளுக்குச் செல்லும் இளம்வயது பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர். வேறு பலர்  அறுபது வயதுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற முதிய தம்பதிகள் ஆவர்.இவர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் நல்ல வேலையில் உள்ளதால், தங்களது பிள்ளைகளால் அன்புடன் அழைக்கப்பட்டு அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க அங்கு போகிறவர்கள் ஆகும். வேறு சில முதியோர், தனியாகவோ ,அல்லது  தம்பதிகளாகவோ அங்குள்ள தமது பேரக்குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவச் செல்லுகின்றவர்கள் ஆவர்.
 அமெரிக்கா செல்வதற்கு அந்த நாடு அரசு 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப்
பொதுவாக 10 வருடங்களுக்கு விசா சென்னையில் வழங்கிவிடுகிறது. USA வந்து
இறங்கியபின்பு immigration அதிகாரிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு அங்கு 
 தங்குவதற்கு அனுமதி அழித்துவிடுகிறது. எது எப்படியாயினும் அமெரிக்கப் பயண வாய்ப்பு   பிள்ளைகள்மூலமே அவர்களுக்குக் கிடைக்கிறது.மற்றப்படி கிடைத்திருக்காது.

பிரிட்டிஷ்  ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு  உபசரிப்பு

சென்னை விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கான செக்
-இன் துவங்கும் போது  நான்,என் மனைவி, என் சகோதரர் ஆகிய மூவருக்கும்
மூன்று வெவ்வேறான  இடங்களில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.online மூலம்
மற்றவர்கள் சீட்ஸ் போட்டுவிட்டபடியால் காலியாக இருந்த சீட்ஸ் ஒதுக்கும்படி
ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒரே வரிசையில் சேர்ந்தாற்போல் மூன்று 
இருக்கைகள் தரும்படி அந்த அலுவர்களிடம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை
அன்புடன்  ஏற்று, விமானத்தில் நுழையும்போது ஒரே வரிசையில் அடுத்தடுத்து
மூன்று இருக்கைகள் ஒதுக்கி இருந்தது மட்டில்லா மகிழ்ச்சியை எங்களுக்குத்
 தந்தது. பொதுவாகவே  பிரிட்டிஷ் ஏர்வேசில் கனிவான உபசரிப்பு .யாவருக்கும்
அளிக்கப்படும். இப்போது மேலும் அதிகமான கனிவானஉபசரிப்பு தரப்படுகிறது.
காலை, மதிய    உணவு உயர்தரமானதாக வழங்கப்படுகிறது.இடையிடையே
டீ, காபி,மற்றும் பலவகையான பழ ரசங்களும், பிஸ்கட்களும் வேண்டிய அளவுக்குக் கொடுக்கிறார்கள்.அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் செய்யப்
படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் இருக்கைக்கு எதிரேயுள்ள சீட்டின்
பின்புறம் சிறிய அளவிலான Monitor  உள்ளது, அதில் விமானம் பறத்தல் பற்றிய
செய்திகள், பாட்டுகள், ஹிந்தி,தமிழ்,ஆங்கில திரைப்படங்கள் இவற்றைத் தொடு
திரை மூலம் நாமே தேர்ந்தெடுத்து பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் தலைக்குமேலே  படிப்பதற்கு பயன்படும்விதத்தில் குறிப்பிட்ட 
இடத்தில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் விளக்கு உள்ளது. தேவையான போது
 சுவிட்ச்சைப் போட்டு அணைத்துக்கொள்ளலாம்.
 விமானம் புறப்படும் முன் வரவேற்பும்,விமானம் தரை இறங்கும் முன் கனிவான வழியனுப்புதலும் நமக்குக்  கிடைக்கின்றன.

அமெரிக்காவில்  புதுமையாகத் தோன்றியவை

இங்கு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் செக் புக்குகளைத் தாங்களே
அச்சடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.வங்கிகள் தரும் செக்புக்குகளும்
கிடைக்கின்றன. ஆனால் அதற்கு அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆகவே
பலர் தாங்களாவே உரிமம் பெற்ற அச்சகங்களில் அச்சடித்துக் கொள்ளுகிறார்கள்.
மேலும்  செக்கில் எழுதுவதை ஒவ்வொரு செக்கிற்கும்  அதன்
  கீழ்  இருக்கும் தாளில்  கார்பன் பேப்பர் மூலம் நகல் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறது. செக் தாள்களில் ஒருவருடைய Account Number மெஷின் படிக்கும்படி Bar Code உள்ளது.. அவருடைய பெயரும் முகவரியும் செக்புக்கில்  அச்சடிக்கப்.
 பட்டுள்ளது.

அமெரிக்காவில்  வீட்டிற்கு முன்னும், பின்னும்  புல்தரை வளர்த்தலை  வீட்டின்
உரிமையாளர்கள் கடைபிடிக்க வற்புறுத்தப்படுகிறது. ஒருவர் தங்கியுள்ள வீடு  சொந்தமானது எனில் அவரும்,வாடகை வீடு எனில் வீட்டின் உரிமையாளரும்
புல்தரையைப் பேணுவது கட்டாயம்  ஆக்கப்பட்டுள்ளது.புல்தரையைப் பேண
குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் புல் வளரவிடாதபடி. மெஷின் மூலம் அடிக்கடி
வெட்ட வேண்டும். புல்லை குறிப்பிட்ட உயரத்திற்கு மேல்  வளரவிட்டால் அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.வீடுகள் தவிர மற்ற பொதுஇடங்களில் புல்தரையின் பராமரிப்பு உள்ளாட்சித்துறை மூலம் கவனித்துக் கொள்ளப்படுகிறது.சாலைகள் தவிர ஊர் முழுவதும் பச்சைபசேல்
என்று புல்தரை பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சி,தருகிறது.

 தபால் பட்டுவாடா
 
அமெரிக்காவில் தபால் பட்டுவாடா செய்யும் விதம் குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு
தெருவிலும் நான்கு ஐந்து வீடுகளுக்கு ஒரே இடத்தில் வருகிற தபால்களைப்
போடுவதற்காக உலோகத்தினாலான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வந்துள்ள
 தபால்களை எல்லாம்  Postal Van  -ல் Postman கொண்டுவருகிறார். சாலையில் இரு
பக்கமும் வீடுகள் இருக்கிற இடங்களில் தபால் பெட்டிகளும் சாலையின் இரு
புறமும் உள்ளன. Van -ஐ Postman ஓட்டிவந்து  பெட்டிகள் இருக்கும் இடங்களில்
Van -ஐ நிறுத்தி தபால்களைப் பெட்டிக்குள் போடுகிறார். முதலில் சாலையின் ஒரு
பக்கத்தில் சென்று தபால்களைப் போட்டுவிட்டு பின்பு  சாலையின் எதிர்புறம்
சென்று  அங்குள்ள பெட்டிகளில் போட்டுச்செல்கிறார்.

 வரலாற்று முக்கியத்துவம் உடைய இடங்களின் பராமரிப்பு
  
பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் உடைய இடங்களைத் தனியாரோ அல்லது அரசோ தமது பொறுப்பில் ஏற்று சீரிய முறையில் பராமரித்து வருவதைப்
பார்க்கலாம்.நாடு முழுதும் நூற்றுக்கணக்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
கட்டிடங்கள். பூங்காக்கள் மற்றும் தொன்மை மிக்க இடங்கள் இவ்வாறு அழிந்து
விடாமல்  காக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு இடத்திற்கு நாங்கள் போனோம். Nauvoo  என்ற அந்த இடம் Illinois மாநிலத்தின் மேற்கு எல்லையில் மிசிசிப்பி நதியின் கரையில் உள்ளது.ஜான் ஸ்மித் என்பவர்  கூறிய மதக்கோட்பாடுகளைப்
பின்பற்றும் பிரிவினரின் புண்ணிய ஸ்தலமாக Nauvoo கருதப்படுகிறது..மனிதரின்  மதநம்பிக்கைகள் எவ்வாறு மாறுபட்டு அதற்கேற்ப அவர்கள் வேறுபட்டு இயங்குகிறார்கள் என்பதை அங்கு சென்ற போது
கண்கூடாக் காணமுடிந்தது..அங்குள்ள கோவிலுக்கு கிறிஸ்தவமதத்தில் ஒரு பிரிவினரான Mormons  என்றழைக்கப்படும்  மக்கள் உலகெங்கிலுமிருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளுகின்றனர்.இவ்விடம் அதன் தொன்மை காரணமாக வரலாற்று இடமாக US அரசால் அங்கீகரிக்கப்பட்டு தனியார் பராமரிப்பில்  உள்ளது. இதுபோல் எண்ணற்ற இடங்கள், சரித்திர மாந்தர் வாழ்ந்த வீடுகள். பூங்காக்கள் தேசிய சின்னங்களாகப் போற்றி பாதுகாக்கப் படுகின்றன.

அமெரிக்க மக்களின் நாட்டுப்பற்று

 நாங்கள் Nauvoo பார்வையாளர் மையத்தில்  திறந்த வெளியரங்கில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.   'மிசிசிப்பியில் சூரியன் மறைதல்' என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய குழுபாடல்களும், நடனங்களும்இன்னிசையும் மனத்தைக் கவர்ந்தன.நிகழ்ச்சியின் இடையே இருவர் அமெரிக்க நாட்டு கொடிகளைப் பிடித்தவாறு முன்செல்ல, நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் அணிவகுத்து வருகின்றனர்.பின்புஅமெரிக்க தேசியகீதம் பாடப்பட்ட து.பார்வையாளர் அனைவரும் எழுந்து,  தங்கள் வலது கையை நெஞ்சின்மீது வைத்து நின்றனர்.பாடல் முடிவு பெற்றதுமArmy, Navy, Air force,
Marines,Coast Guards ஆகிய நாட்டின் பாதுகாப்பில் இணைந்து பணிபுரிவோரைப்  போற்றி பாடகள் தனித்தனியாகப் பாடப்பட்டன. அப்போதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அமெரிக்க மக்களின் நாட்டுபற்றை இது படம்
பிடித்துக் காட்டுவதாக இருந்தது..




  .


  

.

   

 

  
 
 
 
  






 
 

 


  




  .

     

 ,
 .
 
 

 


 

 
   
  

   

 

 
 
 
 
 
 
  
 
 



  



 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக