செவ்வாய், 14 ஜூன், 2011

மாறிய பாடல் வரிகள்

நள்ளிரவில் அமெரிக்காவில்
என் மகன் வீட்டு முதல்தள
படுக்கை அறையிலிருந்து
விண்ணில் தவழும்
வெண்ணிலவைக் கண்டேன்.
கண்ணதாசனின் பாடல் வரிகள்
என்  நினைவுக்கு வந்தன.

அன்று வந்ததும் இதே நிலா
இன்று  வந்ததும் அதே நிலா.
என்றும் உள்ளது ஒரே நிலா.
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா.
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

ஆனால் என் மனத்தில்  மாறி ஒலித்தன
கண்ணதாசனின் அப்பாடல் வரிகள்.

அங்கு பார்த்ததும் இதே நிலா
இங்கு பார்ப்பதும்  அதே நிலா.
 எங்கும் உள்ளது ஒரே நிலா 
இரண்டு இடத்திலும் ஒரே நிலா.
இரண்டு இடத்திலும் ஒரே நிலா.

ஆம், பூமி முழுதும் ஒரே நிலாதான் 
காட்சி  தருகிறது. .
ஆனால் எல்லா இடத்திலும் 
ஒரே நேரத்தில் காண முடிவதில்லை.
அமெரிக்காவில் இரவு என்னும்போது
காட்சி அளிக்கும் நிலவினை
 பூமியின் எதிர்முனையையில் 
இந்தியாவில் பகல் என்பதால்
 நாம் காண முடிவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக