புதன், 15 ஜூன், 2011

அமெரிக்கப் பயண அனுபவங்கள்

அமெரிக்கப் பயண அனுபவங்கள்
 
நானும் என் மனைவியும் அமெரிக்காவுக்கு
இப்போது  வந்துள்ளது  மூன்றாம் முறையாகும்.
சென்னையிலிருந்து சிக்காகோ வருவதற்கு
 பயணம் மொத்தம் 23 மணி நேரம் ஆனது.
சென்னையிலிருந்து லண்டன் வரை என்
சகோதரர் எங்களுடன் பக்கத்து இருக்கையில்
அமர்ந்து வந்தார். பின்பு நாங்கள்சிக்காகவுக்கு
வேறு பிளைட்  பிடித்து மாலை 6  மணிக்கு
வந்தோம்.டொமெஸ்டிக் டெர்மினல் சென்று
பியோரியோவுக்கு உள்நாட்டு விமானம் 
மூலம்   இரவு 10 மணிக்கு வந்தோம். என் மகன்
மருமகள், பேத்தி மூவரும் எங்களை வரவேற்று
வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.மேலும் 75மைல்
காரில் பயணம் பண்ணி  இரவு 12 :30 மணிக்கு வீடு
வந்து சேர்ந்தோம்.நள்ளிரவு 1 மணிக்கு தூங்கச்
சென்றோம்.,
 எனதுமகனின் வீடு , தரைத்தளம் ( basement ) முதல் 
தளம் இரண்டாம் தளம் என மூன்றடுக்கு கொண்டது.
தரைத்தளம் தரைமட்டத்துக்குக் கீழே  உள்ளது.முதல்
தளம் தரைமட்டத்தில் இருப்பதால், இதில்தான் வீட்டு
வாசல் உள்ளது.முன்புறம்  ஒரு வாசல், கார் நிறுத்து
மிடத்தில் ஒருவாசல், பின்புறம் தோட்டத்திற்குச்
செல்ல ஒரு வாசல் என மூன்று வாசல்கள்  உள்ளன
இரண்டாம் தளம் செல்லவும், தரைத்தளம் செல்லவும்
படிக்கட்டுகள் உள்ளன.
.   
,, 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக