திங்கள், 19 டிசம்பர், 2011

தாளாளருக்குப்பாராட்டுக்
கவிதை



தாயாகப் போகும்
தனதன்பு மகளுக்குப்
பேறுகால வலி
வரும் முன்பே
நகரில் சிறந்ததொரு
மருத்துவ மனையில்
சேர்த்துவிட்டு தாளாளர்
வெளியூர் சென்றதை
நான் அறிவேன்.

வீட்டிலேயே மருத்துவர்
யாரும் இன்றி குழந்தையைப்
பெற்றுஎடுக்கலாம்.
தாய் சேய் நலங்கருதி
நல்ல மருத்துவ மனையில்
சேர்த்து சிறந்த மருத்துவர்
வைத்தும் குழந்தையைப்
பெறலாம்.

மற்ற கல்வியியல்
கல்லூரிகள் போல்
Ph.D.-முதல்வர் இன்றியும்
கல்லூரி நடத்தலாம்.
திறமையான Ph.D.-முதல்வரை
நியமித்தும் நடத்தலாம்.
அனைத்தும் தெரிந்த
அறிவுசான்ற தாளாளர்
தேர்ந்தெடுத்த வழி
இரண்டாவதாகச்
சொன்னதாகும்.
கூடுதல் செலவினைச்
சிந்தையில் கொள்ளாமல்
சீரிய தரமான கல்வி
தருவதைக் கருத்திலிருத்தி
வானளாவும் புகழ் கொண்டு
பீடு நடை போடுதற்கு
முனைவர் பட்டம் பெற்றவரை
முதல்வராக நியமனம்
செய்த தாளாளருக்கு -
தாராளமனச் செம்மலுக்கு
இதயம் கனிந்த
பாராட்டுகள் உரித்தாகுக.

இவண்
D.J.மங்களராஜ்
இயக்குநர்
19-12-2011















வியாழன், 21 ஜூலை, 2011

அமெரிக்காவில் சில மாநிலங்களில் குளிர்காலம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் இங்கு   வாழ்க்கை மிகவும் சங்கடமாகிவிடுகிறது.   இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.வீட்டைவிட்டு வெளியே செல்லும் விருப்பம் இல்லாமற்செய்யும் நடுங்கவைக்கும் பயங்கர குளிர் ஒரு காரணம் ஆகும். மனம் தளர்ந்திடலுக்கு மற்றொரு காரணம் வெளியில் உள்ள பனிப்பொழிவும் பார்க்கும் இடமெல்லாம் தரையில்  கிடக்கும் உறைபனியும் தான். இது வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்து விளைவிக்கும் காரணி ஆகும். சாலையில் உறைபனி காரணமாக
காரின் பிரேக்குகள் செயல்படுவதில்லை.எனவே முன் செல்லும் அல்லது பின்னால் வரும் வாகனங்களுடன்  மோதும் ஆபத்து உருவாகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்திச் செல்ல வேண்டிவரும் சாலச் சந்திப்புகளில் இது மிகவும் கடுமையான பிரச்சினையாகிவிடுகிறது. பனிவிழும்போது எதிரே உள்ளது எதுவுமே தெளிவாகத் தெரியாதபடி போய்விடுகிறது.

 அமெரிக்காவின் வடபாகத்தில் வருடத்தில் ஆறு  மாதங்கள் குளிராக இருக்கும். பொதுவாக அமெரிக்கா முழுவதுமே டிசெம்பர் , ஜனவரி, பிப்ரவரி மூன்று மாதங்கள் கடுங்குளிர் இருக்கும்.
 குழாய் நீரில் கைவைக்க முடியாது. தண்ணீர் குடிக்க முடியாதபடி குளிராக இருக்கும். குளிர் நீரில் குளிக்க முடியாது.ஆகவே இங்கு தனியான சொந்த வீடானாலும், வாடகை வீடானாலும், தொகுப்பு வீடானாலும் கண்டிப்பாக சூடுநீர் வசதி இருபத்து நான்கு மணிநேரமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெந்நீருக்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் மின்சார உலை நிறுவி,  சமையல் அறை, குளியல் அறை, வாஷ் பேசின் என நீர் பயன்படும் எல்லா இடங்களுக்கும்  குழாய் மூலம் இணைப்பு ஏற்படுத்தி விநியோகம் பண்ணுகிறார்கள்.   வெந்நீர் , தண்ணீர் இரண்டுக்கும் தனிதனி
குழாய்கள் இல்லாமல், இரண்டுக்கும் ஒரே திருக்கு (knob) மூலம் குறிப்பிட்ட  அளவு  திருக்கி, தேவை
யான சூட்டில் நீர் வரச் செய்கிறார்கள். தேவையான நேரம் மட்டும் உலையில் வெந்நீர் சூடுபடுத்திக்
கொள்ளாமல், நாள் முழுவதும் உலையில் வெந்நீர் இருக்கும்படி உலை இயக்கப்படுகிறது


ஆகாயத்தில்விமானத்தின்  பாதை

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் போஇங் 777 விமானகளைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் பார்த்தறியும்டி
மானிட்டரில் விமானம் பறத்தல் குறித்த விவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. விமானம் பறக்கும்
உயரம், விமானத்தின் தரை வேகம், விமானத்தின் வெளியே வெப்பத்தின் அளவு,புறப்பட்ட இடத்தில் உள்ளூர் நேரம்,சேருமிடத்தில் தற்போதைய நேரம், இன்னும் செல்லவுள்ள தூரம், அதற்காகும்

நேரம்,சேருமிடமடையும் நேரம்,காற்றின் வேகம்    ஆகிய குறிப்புகள் தரப்படுகின்றன. விமானம் பறக்கும்

மிகுந்தஉயரம் 39000 அடி ஆகும். உயரம் கூடும்போது வெளிவெப்பநிலை குறைகிறது. மிக உயரத்தில் (39000 அடி) பறக்கும்போது  வெப்பநிலை மிகவும்  குறைந்து 59சென்டிகிரேட் என்றாகிறது. விமானத்தின்
 வேகம் அவ்வப்போது மாறுகிறது. அதற்கேற்றவாறு சென்றடையும் நேரம் வேறுபடுகிறது. விமானம்
தரை இறங்க இருபது நிமிடங்கள் இருக்கும்போது எல்லா விளக்குகளும் போடப்படுகின்றன. மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியும்படியும், இருக்கையை செங்குத்து நிலைக்குக் கொண்டுவரும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர். விமானம் தரையைத் தொட்டபின் டெர்மினல் Gate -ஐ அடைய சிறிது நேரமாகிறது. அதுவரை யாவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


லங்காஸ்டர் கிராம மாதிரி


பால்டிமொரிலிருந்து நியூ ஜெர்சி செல்லும் சாலையில் சில மைல் தூரம்

  விலகிப்போனால் லங்காஸ்டர் என்ற ஊர் வருகிறது.அங்கு ஆமிஷ் கிராமம் என்று ஒரு
மாதிரி கிராமத்தை உருவாக்கி உள்ளனர். ஆமிஷ் மக்கள்  என்று அழைக்கப்படும் ஒரு
குழுவினர்  ஸ்விட்சர்லாந்து, அல்சேஷ் (தற்போது பிரான்சில் உள்ளது) மற்றும் ஜெர்மனில்
  உள்ள பாலடிநெட் ஆகிய பகுதிகளில் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அமெரிக்காவில்
குடியேறியவர்கள் ஆவர்.









































 அமெரிக்காவில்









,

,  




 








வியாழன், 23 ஜூன், 2011

additional

நாங்கள் Nauvoo பார்வையாளர் மையத்தில்  திறந்த வெளியரங்கில் நடந்த,ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.   'மிசிசிப்பியில் சூரியன் மறைதல்' என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய குழுபாடல்களும், நடனங்களும்இன்னிசையும் மனத்தைக் கவர்ந்தன.நிகழ்ச்சியின் இடையே இருவர் அமெரிக்க நாட்டு கொடிகளைப் பிடித்தவாறு முன்செல்ல, நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் அணிவகுத்து வருகின்றனர்.பின்புஅமெரிக்க தேசியகீதம் பாடப்பட்ட து.பார்வையாளர் அனைவரும் எழுந்து,  தங்கள் வலது கையை நெஞ்சின்மீது வைத்து நின்றனர்.பாடல் முடிவு பெற்றதுமArmy, Navy, Air force,
Marines,Coast Guards ஆகிய நாட்டின் பாதுகாப்பில் இணைந்து பணிபுரிவோரைப்  போற்றி பாடகள் தனித்தனியாகப் பாடப்பட்டன. அப்போதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அமெரிக்க மக்களின் நாட்டுபற்றை இது படம்
பிடித்துக் காட்டுவதாக இருந்தது..
  



திங்கள், 20 ஜூன், 2011

Mississippi River


மிசிசிப்பி ஆறு

Illinois மாநிலத்திலுள்ள Moline நகரத்திலிருந்து  Iowa  மாநிலத்திலுள்ள Davenport
நகரத்திற்குச் செல்ல மிசிசிப்பி ஆற்றினைக் கடக்க வேண்டும். ஆற்றின் மீது 
இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று டாவன்போர்ட்  போவதற்கும் , மற்றபாலம் 
Moline  வருவதற்கும் ஒருவழிப் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது.மிசிசிப்பி 
ஆறு (நைல் நதி போல்) வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது.2500 மைல்
நீளம் உடையது. அது 10 மாநிலங்களைத் தொட்டுச்செல்கிறது.5 மாநிலங்கள் 
அதன் மேற்குக் கரையிலும் 5 மாநிலங்கள் அதன் கிழக்குக்கரையிலும் உள்ளன.
இந்த 10 மாநிலங்களுக்கும் மிசிசிப்பி ஆறு இயற்கையான ஒரு எல்லையாக 
அமைந்துள்ளது. ஆகவே நதிநீர்ப் பிரச்சினை எழாது. ஆற்றினை வைத்து எல்லை
வரையறுக்கப்பட்டுள்ளது மனத்தைக் கவர்ந்தது.

விமானத்தில் பார்த்த பயணிகள்
 
 சென்னையில் லண்டன் செல்லும் பயணிகளில் பல தமிழ் நாட்டவர் இருந்தனர்.
 சிலர் அமெரிக்காவுக்கு IT  சார்ந்த பணிகளுக்குச் செல்லும் இளம்வயது பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர். வேறு பலர்  அறுபது வயதுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற முதிய தம்பதிகள் ஆவர்.இவர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் நல்ல வேலையில் உள்ளதால், தங்களது பிள்ளைகளால் அன்புடன் அழைக்கப்பட்டு அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க அங்கு போகிறவர்கள் ஆகும். வேறு சில முதியோர், தனியாகவோ ,அல்லது  தம்பதிகளாகவோ அங்குள்ள தமது பேரக்குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவச் செல்லுகின்றவர்கள் ஆவர்.
 அமெரிக்கா செல்வதற்கு அந்த நாடு அரசு 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப்
பொதுவாக 10 வருடங்களுக்கு விசா சென்னையில் வழங்கிவிடுகிறது. USA வந்து
இறங்கியபின்பு immigration அதிகாரிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு அங்கு 
 தங்குவதற்கு அனுமதி அழித்துவிடுகிறது. எது எப்படியாயினும் அமெரிக்கப் பயண வாய்ப்பு   பிள்ளைகள்மூலமே அவர்களுக்குக் கிடைக்கிறது.மற்றப்படி கிடைத்திருக்காது.

பிரிட்டிஷ்  ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு  உபசரிப்பு

சென்னை விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கான செக்
-இன் துவங்கும் போது  நான்,என் மனைவி, என் சகோதரர் ஆகிய மூவருக்கும்
மூன்று வெவ்வேறான  இடங்களில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.online மூலம்
மற்றவர்கள் சீட்ஸ் போட்டுவிட்டபடியால் காலியாக இருந்த சீட்ஸ் ஒதுக்கும்படி
ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒரே வரிசையில் சேர்ந்தாற்போல் மூன்று 
இருக்கைகள் தரும்படி அந்த அலுவர்களிடம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை
அன்புடன்  ஏற்று, விமானத்தில் நுழையும்போது ஒரே வரிசையில் அடுத்தடுத்து
மூன்று இருக்கைகள் ஒதுக்கி இருந்தது மட்டில்லா மகிழ்ச்சியை எங்களுக்குத்
 தந்தது. பொதுவாகவே  பிரிட்டிஷ் ஏர்வேசில் கனிவான உபசரிப்பு .யாவருக்கும்
அளிக்கப்படும். இப்போது மேலும் அதிகமான கனிவானஉபசரிப்பு தரப்படுகிறது.
காலை, மதிய    உணவு உயர்தரமானதாக வழங்கப்படுகிறது.இடையிடையே
டீ, காபி,மற்றும் பலவகையான பழ ரசங்களும், பிஸ்கட்களும் வேண்டிய அளவுக்குக் கொடுக்கிறார்கள்.அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் செய்யப்
படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் இருக்கைக்கு எதிரேயுள்ள சீட்டின்
பின்புறம் சிறிய அளவிலான Monitor  உள்ளது, அதில் விமானம் பறத்தல் பற்றிய
செய்திகள், பாட்டுகள், ஹிந்தி,தமிழ்,ஆங்கில திரைப்படங்கள் இவற்றைத் தொடு
திரை மூலம் நாமே தேர்ந்தெடுத்து பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் தலைக்குமேலே  படிப்பதற்கு பயன்படும்விதத்தில் குறிப்பிட்ட 
இடத்தில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் விளக்கு உள்ளது. தேவையான போது
 சுவிட்ச்சைப் போட்டு அணைத்துக்கொள்ளலாம்.
 விமானம் புறப்படும் முன் வரவேற்பும்,விமானம் தரை இறங்கும் முன் கனிவான வழியனுப்புதலும் நமக்குக்  கிடைக்கின்றன.

அமெரிக்காவில்  புதுமையாகத் தோன்றியவை

இங்கு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் செக் புக்குகளைத் தாங்களே
அச்சடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.வங்கிகள் தரும் செக்புக்குகளும்
கிடைக்கின்றன. ஆனால் அதற்கு அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆகவே
பலர் தாங்களாவே உரிமம் பெற்ற அச்சகங்களில் அச்சடித்துக் கொள்ளுகிறார்கள்.
மேலும்  செக்கில் எழுதுவதை ஒவ்வொரு செக்கிற்கும்  அதன்
  கீழ்  இருக்கும் தாளில்  கார்பன் பேப்பர் மூலம் நகல் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறது. செக் தாள்களில் ஒருவருடைய Account Number மெஷின் படிக்கும்படி Bar Code உள்ளது.. அவருடைய பெயரும் முகவரியும் செக்புக்கில்  அச்சடிக்கப்.
 பட்டுள்ளது.

அமெரிக்காவில்  வீட்டிற்கு முன்னும், பின்னும்  புல்தரை வளர்த்தலை  வீட்டின்
உரிமையாளர்கள் கடைபிடிக்க வற்புறுத்தப்படுகிறது. ஒருவர் தங்கியுள்ள வீடு  சொந்தமானது எனில் அவரும்,வாடகை வீடு எனில் வீட்டின் உரிமையாளரும்
புல்தரையைப் பேணுவது கட்டாயம்  ஆக்கப்பட்டுள்ளது.புல்தரையைப் பேண
குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் புல் வளரவிடாதபடி. மெஷின் மூலம் அடிக்கடி
வெட்ட வேண்டும். புல்லை குறிப்பிட்ட உயரத்திற்கு மேல்  வளரவிட்டால் அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.வீடுகள் தவிர மற்ற பொதுஇடங்களில் புல்தரையின் பராமரிப்பு உள்ளாட்சித்துறை மூலம் கவனித்துக் கொள்ளப்படுகிறது.சாலைகள் தவிர ஊர் முழுவதும் பச்சைபசேல்
என்று புல்தரை பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சி,தருகிறது.

 தபால் பட்டுவாடா
 
அமெரிக்காவில் தபால் பட்டுவாடா செய்யும் விதம் குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு
தெருவிலும் நான்கு ஐந்து வீடுகளுக்கு ஒரே இடத்தில் வருகிற தபால்களைப்
போடுவதற்காக உலோகத்தினாலான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வந்துள்ள
 தபால்களை எல்லாம்  Postal Van  -ல் Postman கொண்டுவருகிறார். சாலையில் இரு
பக்கமும் வீடுகள் இருக்கிற இடங்களில் தபால் பெட்டிகளும் சாலையின் இரு
புறமும் உள்ளன. Van -ஐ Postman ஓட்டிவந்து  பெட்டிகள் இருக்கும் இடங்களில்
Van -ஐ நிறுத்தி தபால்களைப் பெட்டிக்குள் போடுகிறார். முதலில் சாலையின் ஒரு
பக்கத்தில் சென்று தபால்களைப் போட்டுவிட்டு பின்பு  சாலையின் எதிர்புறம்
சென்று  அங்குள்ள பெட்டிகளில் போட்டுச்செல்கிறார்.

 வரலாற்று முக்கியத்துவம் உடைய இடங்களின் பராமரிப்பு
  
பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் உடைய இடங்களைத் தனியாரோ அல்லது அரசோ தமது பொறுப்பில் ஏற்று சீரிய முறையில் பராமரித்து வருவதைப்
பார்க்கலாம்.நாடு முழுதும் நூற்றுக்கணக்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
கட்டிடங்கள். பூங்காக்கள் மற்றும் தொன்மை மிக்க இடங்கள் இவ்வாறு அழிந்து
விடாமல்  காக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு இடத்திற்கு நாங்கள் போனோம். Nauvoo  என்ற அந்த இடம் Illinois மாநிலத்தின் மேற்கு எல்லையில் மிசிசிப்பி நதியின் கரையில் உள்ளது.ஜான் ஸ்மித் என்பவர்  கூறிய மதக்கோட்பாடுகளைப்
பின்பற்றும் பிரிவினரின் புண்ணிய ஸ்தலமாக Nauvoo கருதப்படுகிறது..மனிதரின்  மதநம்பிக்கைகள் எவ்வாறு மாறுபட்டு அதற்கேற்ப அவர்கள் வேறுபட்டு இயங்குகிறார்கள் என்பதை அங்கு சென்ற போது
கண்கூடாக் காணமுடிந்தது..அங்குள்ள கோவிலுக்கு கிறிஸ்தவமதத்தில் ஒரு பிரிவினரான Mormons  என்றழைக்கப்படும்  மக்கள் உலகெங்கிலுமிருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளுகின்றனர்.இவ்விடம் அதன் தொன்மை காரணமாக வரலாற்று இடமாக US அரசால் அங்கீகரிக்கப்பட்டு தனியார் பராமரிப்பில்  உள்ளது. இதுபோல் எண்ணற்ற இடங்கள், சரித்திர மாந்தர் வாழ்ந்த வீடுகள். பூங்காக்கள் தேசிய சின்னங்களாகப் போற்றி பாதுகாக்கப் படுகின்றன.

அமெரிக்க மக்களின் நாட்டுப்பற்று

 நாங்கள் Nauvoo பார்வையாளர் மையத்தில்  திறந்த வெளியரங்கில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.   'மிசிசிப்பியில் சூரியன் மறைதல்' என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய குழுபாடல்களும், நடனங்களும்இன்னிசையும் மனத்தைக் கவர்ந்தன.நிகழ்ச்சியின் இடையே இருவர் அமெரிக்க நாட்டு கொடிகளைப் பிடித்தவாறு முன்செல்ல, நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் அணிவகுத்து வருகின்றனர்.பின்புஅமெரிக்க தேசியகீதம் பாடப்பட்ட து.பார்வையாளர் அனைவரும் எழுந்து,  தங்கள் வலது கையை நெஞ்சின்மீது வைத்து நின்றனர்.பாடல் முடிவு பெற்றதுமArmy, Navy, Air force,
Marines,Coast Guards ஆகிய நாட்டின் பாதுகாப்பில் இணைந்து பணிபுரிவோரைப்  போற்றி பாடகள் தனித்தனியாகப் பாடப்பட்டன. அப்போதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அமெரிக்க மக்களின் நாட்டுபற்றை இது படம்
பிடித்துக் காட்டுவதாக இருந்தது..




  .


  

.

   

 

  
 
 
 
  






 
 

 


  




  .

     

 ,
 .
 
 

 


 

 
   
  

   

 

 
 
 
 
 
 
  
 
 



  



 

  

வியாழன், 16 ஜூன், 2011

Availing wheel chair facility in London airport

விமான நிலையத்தில் wheel chair வசதி
 
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் இறங்கவும் ஏறவும் தனி டெர்மினல்கள் இருக்கின்றன. லண்டன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து பல்வேறு
ஏர்வேய்ஸ் விமானங்கள் வந்து செல்வதால் அவை வந்திறங்கும்,மற்றும் புறப்பட்டுச்செல்லும் Gate எது என்பது ஒரு மணி நேரம் முன்னதாகத்தான் அறிவிக்கப்படுகிறது..சிக்காகோ செல்ல வேண்டிய விமானம் புறப்படும் Gate எது என்ற அறிவிப்பு வரும் வரை நாங்கள் வந்து இறங்கிய டெர்மினலில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம்.அறிவிப்புவந்ததும் குறிப்பிட்ட Gate ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.நான் ஏற்கனவே நீண்ட தூரம் டெர்மினல் முழுதும் நடந்துசுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்தேன். எனவே மீண்டும்நடக்கத் தயக்கமாக இருந்தது. ஆனால் நடக்கத்துவங்கியவுடன்  wheel chair ஐத் தள்ளிக்கொண்டு வந்தவரிடம் wheel chair பற்றிவிசாரித்தேன். அவர் இநதிய வம்சத்தவர் என்பதால் என்னைஅதில் கொண்டுபோக இசைந்தார்.அவர் விரைவாக என்னை lift ல் 
அழைத்துச் சென்று  transition  train மூலம் சிக்காகோ செல்லும்விமானத்துக்கான Gate -ல் உள்ளே முதல் ஆளாக ஏறுவதற்குiவழி செய்தார். அவர் செய்தஉதவியால் மிக விரைவாக சிரமம் ஏதுமில்லாமல் விமானத்தில் எங்கள் இருக்கைகளில் சென்று மகிழ்ச்சியுடன் அமர்ந்தோம். wheel chair வசதி வேண்டுவோர் விமான
 டிக்கெட் வாங்கும்போதே கேட்டுவிட வேண்டுமாம்.

அமெரிக்காவில் இம்முறை கண்ட புதுமைகள்

வீட்டில்  குழாய்த்தண்ணீர்  வேண்டிய சூட்டில் பெறுவதற்கு இரண்டு (knobs) திருக்குகள் முன்பு உண்டு. இப்போது ஒரே ஒரு (knob ) திருக்கு மட்டுமே உள்ளது. அதை இடதுபுறம்சுற்றினால் வெந்நீரும் வலது புறம் சுற்றினால் குளிர்ந்த
நீரும் வருகிறது வேண்டிய சூட்டில் சுற்றி நிறுத்திவிட்டால் குறிப்பிட்ட  வெப்பத்தில் தண்ணீர் வருகிறது.

என் மகன் வீட்டில் சமையலுக்கு எரிவாயு அடுப்பு முன்பு பயன் படுத்தப்பட்டது. இப்போது மின்சார அடுப்பு (Electric stove ) பயன்படுத்தப்படுகிறது.. அனுகூலம்
யாதெனில் மிகவும் அதிகமான வெப்பம் கிடைக்கிறது.ஆனால் உடனடியாக
 சூடாகாமல் சிறிது நேரம் ஆகிறது. மேலும் அனைவரது வீட்டிலும் மைக்ரோவேவ் அடுப்பும் உள்ளது..

அனுபவங்கள் வாயிலாகக் கற்றல்:
நேரடியான அனுபவங்கள் மூலம் எளிதாகக் கற்க முடியும் என்பது ஒரு கல்வியியல் உண்மை ஆகும். பூமி உருண்டையில் பூமத்திய ரேகையை
ஒட்டிய இடங்களில் பகல் மற்றும் இரவு சமமாக இருக்கும்.  ஆனால் தூரம் செல்ல செல்ல  சூரியன்  மறையும் நேரம் பிந்துகிறது. இதை நாங்கள் தங்கிய
இடத்தில் காண முடிந்தது. இங்கு இரவு ஒன்பது வரை கூட வெளிச்சமாக  உள்ளது. அதுபோல் காலையிலும் சீக்கிரமாக விடிந்து விடுகிறது
.
பூகோளைப்பாடத்தில் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளூர் நேரம் மாறுபடும்
என்று படிப்போம்.பூமி ஒரு முறை சுற்ற ,அதாவது 360 டிகிரி சுற்ற 24 மணிநேரம் 
எடுக்கிறது. ஆகவே ஒவ்வொரு15 டிகிரிக்கும் 1 மணி  நேர  வேறுபாடு இருக்கும்.
அமெரிக்கா விரிந்து பரந்த நாடு. மேற்கு ஓரத்தில் உள்ள சான்ப்ரான்சிஸ்கோவில்
இருந்து கிழக்கு ஓரத்திலுள்ள  நியூயார்க் வரை 3 மணி நேர வேறுபாடுஉள்ளது.
எனவே சான்ப்ரான்சிஸ்கோவில் காலை 8 மணி எனில், நியூயார்க்கில் காலை 11
 மணி ஆகும். இந்தியாவில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் என்று நாடு முழுவதற்கும் ஒரே நேரம்தான் உள்ளது.ஆனால் அமெரிக்காவில் நான்கு நேர மண்டலங்கள் (Time Zones ) இருக்கின்றன. 
Daylight Saving  Time  (DST) என்ற கருத்தும் அமெரிககா சென்றபோது நேரடி அனுபவமாக அறிய  முடிந்தது.நீண்ட நேரம் சூரிய வெளிச்சம்  கிடைக்கும் கோடைக்காலத்தில்அதனைப் பயன்படுத்தும் நோக்கத்தில் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு  துவங்கி  நவம்பர் மாதம் முதல் ஞாயிறு முடிய ஏறக்குறைய எட்டுமாதங்களுக்கு   நேரமானது ஒரு மணி நேரம் முன்னுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று நவம்பர்  மாதம் முதல் ஞாயிறு துவங்கி மார்ச் மாதம் இரண்டாவது  ஞாயிறு முடிய நேரமானது பழையபடி ஒரு மணி நேரம் பின்னுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் செய்யப்படும் இரண்டு நாட்களிலும் யாவரும் கடிகாரத்தில் நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.
IMAX  தியேட்டரில் திரைப்படம் பார்த்த அனுபவம்
ஐயோவா மாநிலத்தில் உள்ள டாவன்போர்ட்டில் உள்ள IMAX தியேட்டரில் 3D திரைப்படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. முதல் முறையாக முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது பரவசமூட்டுவதாக இருந்தது. படம் துவங்கியதும்.  பிரமாண்டமான திரையில்  காட்சிகள் முப்பரிமாணத்தில்
தோன்றி மனத்தைக் கவர்ந்தன. எடுத்துக்காட்டாக, Sharks என்ற 3D படத்தில்
சுறா மீன் நம்மை நோக்கிப் பாய்ந்து வருவதுபோல் தோன்றி அதிர்ச்சியைத்
தந்தது, டெக்சாஸ் மாநிலத்தில் போர்ட்வொர்த் நகரில் உள்ள IMAX தியேட்டரில்
திரைப்படம் பார்த்த அனுபவம் வேறுபட்டதாகும்.அங்கு IMAX தியேட்டரின்
அமைப்பும் , படம் திரையிடப்பட்டவிதமும் வேறுபட்டிருந்தது.அங்கு படம் விழும்
 திரையானது அரைக் கோளவடிவத்தில் இருந்தது. மேலும் ஒலிபெருக்கிகள்
திரையரங்கின் முன்னும் , நமக்குப் பின்னும் , நமக்கு வலது, இடது புறங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளன. எனவே படம் ஓடும்போது காட்சிகள் நம் அருகே நிகழ்வது
போன்று தெரிகிறது.உதாரணமாக, குதிரைகள் ஓடும்போது  நம் தலைக்கு மேல் 
பாய்வதுபோல் உள்ளது.மேலும் ஒலி ஸ்டீரியோ முறையில்   பல திசைகளிலும்
எழுந்து நம்மைப் பிரமிப்படைகின்றன  .IMAX
தியேட்டரில் திரையிடப்படுவதற்கேன்றே படங்கள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
 
 
 
 
 

 
 
 
 .
 

 

 




  







 
  
 



 
 

 
   
 
   

   

 












 

  

  
 
 


புதன், 15 ஜூன், 2011

அமெரிக்கப் பயண அனுபவங்கள்

அமெரிக்கப் பயண அனுபவங்கள்
 
நானும் என் மனைவியும் அமெரிக்காவுக்கு
இப்போது  வந்துள்ளது  மூன்றாம் முறையாகும்.
சென்னையிலிருந்து சிக்காகோ வருவதற்கு
 பயணம் மொத்தம் 23 மணி நேரம் ஆனது.
சென்னையிலிருந்து லண்டன் வரை என்
சகோதரர் எங்களுடன் பக்கத்து இருக்கையில்
அமர்ந்து வந்தார். பின்பு நாங்கள்சிக்காகவுக்கு
வேறு பிளைட்  பிடித்து மாலை 6  மணிக்கு
வந்தோம்.டொமெஸ்டிக் டெர்மினல் சென்று
பியோரியோவுக்கு உள்நாட்டு விமானம் 
மூலம்   இரவு 10 மணிக்கு வந்தோம். என் மகன்
மருமகள், பேத்தி மூவரும் எங்களை வரவேற்று
வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.மேலும் 75மைல்
காரில் பயணம் பண்ணி  இரவு 12 :30 மணிக்கு வீடு
வந்து சேர்ந்தோம்.நள்ளிரவு 1 மணிக்கு தூங்கச்
சென்றோம்.,
 எனதுமகனின் வீடு , தரைத்தளம் ( basement ) முதல் 
தளம் இரண்டாம் தளம் என மூன்றடுக்கு கொண்டது.
தரைத்தளம் தரைமட்டத்துக்குக் கீழே  உள்ளது.முதல்
தளம் தரைமட்டத்தில் இருப்பதால், இதில்தான் வீட்டு
வாசல் உள்ளது.முன்புறம்  ஒரு வாசல், கார் நிறுத்து
மிடத்தில் ஒருவாசல், பின்புறம் தோட்டத்திற்குச்
செல்ல ஒரு வாசல் என மூன்று வாசல்கள்  உள்ளன
இரண்டாம் தளம் செல்லவும், தரைத்தளம் செல்லவும்
படிக்கட்டுகள் உள்ளன.
.   
,, 




செவ்வாய், 14 ஜூன், 2011

மாறிய பாடல் வரிகள்

நள்ளிரவில் அமெரிக்காவில்
என் மகன் வீட்டு முதல்தள
படுக்கை அறையிலிருந்து
விண்ணில் தவழும்
வெண்ணிலவைக் கண்டேன்.
கண்ணதாசனின் பாடல் வரிகள்
என்  நினைவுக்கு வந்தன.

அன்று வந்ததும் இதே நிலா
இன்று  வந்ததும் அதே நிலா.
என்றும் உள்ளது ஒரே நிலா.
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா.
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

ஆனால் என் மனத்தில்  மாறி ஒலித்தன
கண்ணதாசனின் அப்பாடல் வரிகள்.

அங்கு பார்த்ததும் இதே நிலா
இங்கு பார்ப்பதும்  அதே நிலா.
 எங்கும் உள்ளது ஒரே நிலா 
இரண்டு இடத்திலும் ஒரே நிலா.
இரண்டு இடத்திலும் ஒரே நிலா.

ஆம், பூமி முழுதும் ஒரே நிலாதான் 
காட்சி  தருகிறது. .
ஆனால் எல்லா இடத்திலும் 
ஒரே நேரத்தில் காண முடிவதில்லை.
அமெரிக்காவில் இரவு என்னும்போது
காட்சி அளிக்கும் நிலவினை
 பூமியின் எதிர்முனையையில் 
இந்தியாவில் பகல் என்பதால்
 நாம் காண முடிவதில்லை.


சனி, 28 மே, 2011

Vidai pera villai

அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே !

உருவகப் படுத்திக் கூறும்போது  
கல்வியியல் கல்லூரி குழந்தை எனவும்
நான் செவிலித்தாய் எனவும் ஆகும்...
கல்லூரி உதயம் ஆகும் முன்பே
 11-8-2006 அன்றே பணியில் 
 நான் சேர்ந்துவிட்டேன்.
இரு வாரங்கள் கழித்து
 தாளாளர் அவர்களுடன்
நானும் மற்றும் மூவரும் 
NCTE ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க
பெங்களூரூ  சென்றோம்.
கல்லூரி எனும் குழந்தை
பிறந்த கதையில் இன்னும்
எத்தனையோ மறக்க முடியாத
தொடர் சம்பவங்கள் உண்டு.
NCTE  குழுவினரின் வருகை,
அழகப்பா பல்கலைக் கழக
 இணைவு பெற விண்ணப்பம்
அதற்கான குழுவினர் வருகை
தாளாளரின் செல்ல மகள் 
திருமணத்துக்கு மறுநாள்
 B.Ed. வகுப்பு துவக்கம்,
காலம் தாழ்ந்து பெறப்பட்ட
இணைவு ஆணை
என நிகழ்வுகளின்
பட்டியல் நீண்டு செல்லும்.

பிறந்த குழந்தைக்குப் பாலூட்டி
சீராட்டி தாலாட்டி வளர்த்திட்ட
செவிலித்தாய் போல்
கல்லூரியின் வளர்ச்சியை
கண்ணுற்று களித்தேன்.
குழந்தை தத்தி தத்தி
நடை பயில அதன் கரம்
பிடித்து வழி நடத்திய
வளர்ப்புத்தாய் போன்று
கல்லூரியை வழிநடத்தினேன்.
இன்று குழந்தை பிடிக்காமல்
தானே நடக்கும் நிலைக்கு
வளர்ந்துவிட்டது.
சீராட்டிப் பாராட்டி
வளர்த்த தாய்
இன்று ஐந்து வயதை
எட்டிப் பிடித்த சேயை
விட்டுப் பிரிந்து போக
மனமின்றி தவிக்கிறாள்.
திரைப் படப் பாடல் ஒன்று
நெஞ்சினிலே தொடர்ந்து
ஒலித்துக்கொண்டிருக்கிறது

கலை மகள் கைப்பொருளே
உன்னைக் கவனிக்க ஆளில்லையே
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரலில்லையே

நான் யார் உனை மீட்ட? - வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு
நிலை இல்லாமல் தவிக்கிறேன்

கல்லூரி பதிவேட்டில் இன்று
இயக்குனர் மற்றும் முதல்வர்
பெயர்கள் இல்லை.
ஏன் இது நடந்தது
எனத் தெரியவில்லை.
அதனால் தான்
நான் யார் உ னை மீட்ட? - வரும் 
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
எனும் பாடல் வரிகள்
நெஞ்சில் இடைவிடாமல் 
ஒலித்த வண்ணம் உள்ளன.
நான் விடை பெறவில்லை.
மீண்டும் வருவேன்
காலம் கனியும் வரை
காத்திருப்பேன்


















புதன், 25 மே, 2011

Oh! my dear daughter

என் அன்பு மகளே !
நீ எப்போது மாறினாய்?
இரண்டு விஷயத்தில்
நீ மாறிவிட்டாய்!
ஒன்று மதநம்பிக்கை பற்றியது
மற்றது வாழ்க்கை முறை பற்றியது.
நீ வளர்க்கப்பட்ட விதம்
தாமரை இலைத் தண்ணீர் போல்
மதத்துடன் ஒட்டாமல்  விலகி நின்று
வாழ்ந்திட வழி வகுப்பதாகும்.
அது போன்றே
நீ வளர்க்கப்பட்ட விதம்
பகட்டையும் படாடோபத்தையும்
விரும்பாம்மல் எளிமையாய்
வாழ்வதற்கு வழி செய்வதாகும்.
சொகுசும் வசதியும்
பெற்ற சுகமான வாழ்வு
வாழ்ந்திடுதல் ஏற்கத்தக்கது
ஒளி அறியா இருட்டில் வாழும்
பார்வையற்றவர்களை
படிப்பதற்கு வகுப்பெடுத்து
வழி நடத்தும்
தியாகத்தைப் புரியும் உனக்கு
எளிமையை விரும்பும் மனம்
இயல்பாகவே இருக்கும்.
ஆடம்பரமும் அகந்தையும்
உனக்கு உடன்பாடானவையாக
.இருக்க முடியாது.
இப்போது நீ எளிமையை
விரும்புகிறாயா?
பகட்டையும் படாடோபத்தையும்
வெறுக்கிறாயா ?
தற்பரிசோதனை செய்து பார் 
முன்பு போல் மாறுவாயா?
இவ்வுலகத்தின் பெருமையையும் 
வீண் ஆடம்பரத்தையும்
வெறுத்துவிடுவாயா?



 

 
 




























திங்கள், 16 மே, 2011

cinema lyrics humming in the ears

             (1)

பூவாகிக் காயாகிக் 
கனிந்தமரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் 
கிடந்தமரம் ஒன்று

                 (2)
                
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளம் இல்லை மகளே

                            (3)

கலைமகள் கைப்பொருளே - உன்னைக்
கவனிக்க ஆள் இல்லையே
விலையில்லா மாளிகையில்- உன்னை
மீட்டவும் விரல் இல்லையே
நான் யார் உன்னை மீட்ட -வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு 
நிலையில்லாமல் தவிக்கிறேன்






வெள்ளி, 8 ஏப்ரல், 2011

CONTENTMENT

உயர உயர போய்க்கொண்டே இருக்க முடியாது.
எட்டப்பட்ட உயரம் போதும் என்று எண்ணி 
மன நிறைவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உடலுக்கும் மனத்துக்கும் அதுதான் நல்லது.

புதன், 6 ஏப்ரல், 2011

Sever Attachment

பந்தத்தை அறுத்து எறி

வாழ்க்கையில் எந்த பந்தமும் வளர்க்காமல்
இருப்பதுதான் நிம்மதி பெறுவதற்கு வழியாகும்.
மனத்தில் எந்தவொன்றையும் குறித்து
பரிவுக்கு இடம் அளிக்கக்கூடாது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Felicitation Poem

வாழ்த்து கவிதை

புத்தாண்டு மலர்ந்த
மறு நாளாம் இன்று
புரட்சித் தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனங்கள் 
மூன்றில் ஒன்றான
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
ஐந்தாம் ஆண்டு விழா.

தாளாளரின் சிந்தையிலே உதித்த
முதல் குழந்தையின் வாழ்வில்
இனிதான திருநாள் இது.
பொன்னாளாம் இந்நாளைச்
சீரும் சிறப்புமாகக் கொண்டாடத்
திட்டம் தீட்டியபோது
ஒப்பாரும் மிக்காரும் இல்லா 
ஒருவரைச் சிறப்புப் பேச்சாளராக
அழைக்கும்  எண்ணம் 
தாளாளர் மனத்தில் எழுந்தது.

அனைவரையும்
நகைச்சுவை மழையில்
நனையவைக்கும்
தித்திக்கும் கரும்பனைய பேச்சாளர்
நெல்லைக் கண்ணன்
தாளாளர் நினைவில் வந்தார்.
நேர்மிகு நெல்லைக் கண்ணன்
சங்கத்தமிழ் குறுந்தொகைபேச்சாளரோ
தங்கத்தமிழ் பெருந்தொகை பேச்சாளரோ
யாராயினும் அவரை அழைக்கத்
தாளாளர் நல்ல முடிவெடுத்தார்.

நேரம் போவதே தெரியாமல்
மணிக்கணக்கில் தனது
தேமதுரப் பேச்சால் கூட்டத்தினரை
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க
நம்மிடையே வந்துள்ளார்
நண்பர் நெல்லைக் கண்ணன் .

நானும் நெல்லையைச் சேர்ந்தவன்தான்
என்பதில் பெருமை மிகக் கொள்கிறேன்.

என் உடல் நலம் கருதி
உடலாலும் மனத்தாலும்
பணியிடத்தைத் தவிர்க்கும்
நிலை எழுந்துள்ளது.
எனவே நேரில் வந்து
கலந்துகொள்ள
இயலாமல் தவிக்கிறேன்.

விழா சீரோடும் சிறப்போடும்
நடைபெற மனதார வாழ்த்துகிறேன்

இவண்
இயககுநர்
____________________________________________
என் உடலளவில் இல்லத்தில் இருக்கிறேன்
என் உள்ளமோ விழா அரங்கில் உள்ளது.
உடல் நலக்  குறைவிலிருந்து மீண்டு வருவேன்.
விரைவில் மீண்டும் வருவேன்.

Decision (1-4-2011)

எந்த செய்தியையும்  தெரிந்துகொள்ளும் விருப்பம் இல்லை.
டிவி பார்க்கவோ நியூஸ் பேப்பர் படிக்கவோ ஆர்வம் இல்லை.
வருகின்ற செய்திகள் மனத்திற்கு ஊக்கம் அழிப்பதாகத்
தெரியவில்லை. வீணாக ஏன் செய்திகளைத் தெரிந்து கொண்டு 
பின் வருந்த வேண்டும் என்று எண்ணி டிவி மற்றும் நியூஸ் பேப்பர்
பக்கமே போவதில்லை. 

Lessons

நேரில் கண்டவை கற்றுத்தந்த பாடங்கள்

இன்று காலையில் தென்னை ஈர்க்குமார் கட்டினைத் தலையிலும்
தேங்காய் நிறைத்த பையினை க் கையிலும் தூக்கிக்கொண்டு 
விற்பதற்கு முதியவர் ஒருவர் வீதியில் போய்க்கொண்டிருந்தார்.
ஆதரவற்ற நிலையில் உழைத்துப் பிழைப்பதைக் காணமுடிந்தது.
பணம் இல்லை என்று நாமெல்லாம் நினைக்கக்கூடாது என்பதை
இக்காட்சி எனக்கு உணர்த்தியது.
இது போன்ற எண்ணற்ற காட்சிகளைத் தினமும் பார்க்கிறேன்.
பொருளாதார நிலை குறித்து திருப்தி உடையவராக நாம்
இருக்க வேண்டும் என்பதையே இக்காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்திய  நாடு ஏழைகள் நிறைந்த நாடு. வறுமையில் வாடும் மக்களை 
எங்கு நோக்கினும் காணலாம். 
பராசக்தி திரைப்படத்தில் 
 "வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா
அதற்கு அழிவே இல்லையா?" என்ற பாடல் வரிகள் வரும்.
ஆம் . ஒருநாளும் விடிவே கிடையாது என்று கூறும்படிதான்
நிலைமை இருக்கிறது.








வியாழன், 31 மார்ச், 2011

CHANGE (Quotes ) (31-3-2011)


காலம் மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டிருக்கும்.
மாற்றம் தவிர்க்க முடியாதது ஒன்று.

மாறுவதற்கு நமக்குள்ள திறனே
நமக்குரிய ஒரே பாதுகாப்பு ஆகும்.

எல்லாம் மாறிவிடும் என்ற உண்மையை
ஏற்கவில்லை என்றால்
பூரண அமைதியைப் பெறமுடியாது.

சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டிருக்கின்ற
இவ்வுலகில் மாற்றிக்கொள்ள முடியாத 
நோக்கமோ, கருத்தோ முட்டாள்தனமானது ஆகும்.

ஒரு சூழ்நிலையை நம்மால் மாற்ற இயலவில்லை எனில்
நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நிலையான மகிழ்ச்சி மற்றும் அறிவு உடையவர்கள் 
அடிக்கடி மாறுபவர்கள் ஆவர்.

ஒன்றைப் பிடிக்கவில்லை எனில் அதை மாற்று..
அதை  மாற்ற முடியவில்லை  எனில், அதைப்பற்றி
எண்ணுகின்ற முறையை மாற்றிக்கொள்.

நிலையற்ற வாழ்வில் நாம் எதை நம்புவது ?
மகிழ்ச்சி, உயர்வு மற்றும் பெருமை யாவும்
நிலையற்றவை ஆகும்.







சனி, 26 மார்ச், 2011

Hidden Beauty



மேகம் மறைத்துநிற்கும்
மலைமுகடு அழகா?


மேகம் மறைக்காத 
மலைமுகடு அழகா?

மறைத்து வைப்பதில்தான்
கவர்ச்சி கூடுகிறது.

மறைக்கபடுவதில்தான்
ஆவல் தூண்டப்படுகிறது.



வியாழன், 24 மார்ச், 2011

Dogmas

எந்த ஒரு மதத்தை எடுத்து ஆழ்ந்து பார்த்தாலும்
அந்த மதத்தின் கோட்பாடுகளாக, விதிகளாக,
கட்டளைகளாக கூறப்படுபவை எல்லாம் அந்த 
மதத்தைப் பின்பற்றும் தனி மனிதனின் மூலமாகவே
உண்டாகின்றன.
சிறு கிராமத்தில் வழிபடும் இடமானாலும், புண்ணிய ஸ்தலமாகக் 
கருதப்படும் பெரிய வழிபாட்டிடம் என்றாலும் பக்தர்கள் 
கடைபிடிக்க வேண்டியவற்றை, அவ்விடங்களில் உள்ள 
தனி மனிதர்களே தீர்மானிக்கின்றனர்.தெரிந்தோ தெரியாமலோ
மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர்..கடவுளுக்கே இல்லாத
அக்கறை அவர்களால் காட்டபடுகிறது.